நெல்லிக்காயின் பயன்கள்


நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில ரோகங்களுக்கு நெல்லிக்காய் சஞ்சீவினியாகும் . முந்தைய காலங்களில் அதன் மகத்துவத்தை அறிந்திருந்த பெரியோர் காடுகளில் மிக எளிதாக கிடைக்கும் நெல்லிக்காயை கொண்டு வந்து பல்வேறு விதங்களில் பயன் படுத்தி வந்தனர். ஆனால் இன்று காடுகள் குறைந்து விட்ட நிலையில் மலை நெல்லிக்காய்கள் அழிந்து வருகின்றன என்றாலும் பல மேம்பட்ட நெல்லிக்காய்கள் கிடைக்கின்றன. அவற்றை வளர்த்து லாபம் பெற வேண்டியுள்ளது. நெல்லிக்காயில் ஏராளமாக வைட்டமின் சி இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் . தவிர பித்தத்தையும் போக்கும். அஜீரணம் , காஸ்ட்ரிக் பிரச்சனைகளால் அவதிப்பட்டாலும் , மலசிக்கல் , அல்சர் மற்றும் குடல் சம்மந்த பட்ட பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் அமிர்தமாகும் . இது மட்டுமின்றி கூந்தலின் வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்தாகும். தவிர கண்பார்வையையும் பராமரிக்கும் குணம் கொண்டது. நெல்லிக்காயின் ஆம்லா ஜூஸை தினசரி உணவுடனும் மற்றும் உடற்பயிற்சிகள் போதும் அளவுடன் உட்கொண்டால் சர்க்கரை வியாதி முழுதுமாக கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் உடலின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். நெல்லிக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி கண்பார்வை, ஜீரண சக்தி மற்றும் உடலில் தாது சக்தியை கூட்டும். நெல்லிக்காய் பொடியை ரசம் மற்றும் சாம்பார்களில் சேர்த்து கொண்டாலும் அல்லது மோரில் கலந்து குடிப்பதாலும் ஜீரண சக்தி , மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறையும். தவிர நெல்லிக்காய் பொடியை சீயக்காய் பொடியுடன் கலந்து தலைக்கு பூசிவந்தால் பால்ய நரை , முடி உதிர்வது ஆகியவற்றை தவிர்க்கலாம். நெல்லிக்காய் எண்ணெய் கூந்தல் அடர்த்தியான கருப்பு நிறம் மற்றும் மினுமினுப்பு பெற உதவும்.