நேரு நினைவிடத்தில் சோனியா அஞ்சலி

புதுடெல்லி:மே. 27 – இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.