நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஆக. 12 மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், நைஜரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நைஜர் நாட்டில் இந்தியர்கள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரிவித்தார்.