நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு இலவச உணவு

பெங்களூர், மார்ச் 11-
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் பசியை போக்க, ரொட்டி தொண்டு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இந்திரா காந்தி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, சஞ்சய் காந்தி மருத்துவமனை, நிமான்ஸ் மருத்துவமனை, ஆகியவற்றுக்கு வரும் ஏழைகளின் பசியை போக்க இந்த அறக்கட்டளையின் நிறுவனர் சையத் குலாப் வேறு, எவரும் செய்யப்படாத இந்த பணியை செய்து வருகிறார்.
தினமும் மதியம் 12 மணிக்கு சித்தாப்பூர் போலீஸ் நிலையம் முன் நூற்றுக்கும் மேற்பட்டவர் பசியால் வாடுகின்றனர். கலாமின் வாகனம் வரும் வரை காத்திருக்கின்றனர்.
ராஜுவ் காந்தி மருத்துவமனையின் சையத் குலாபின் வாகனம் வந்து நின்றவுடன், அனைவரும் வரிசையில் நிற்கின்றனர். அவர் கைகளில் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார். ஜெய் நகர், திலக் நகரில் வசிக்கும் சையது குலாப் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை மழை, குளிர், வெயில், காற்று, என்று எதையும் எதிர்பாராமல், ஒரு நாள் கூட தவறாமல் இலவச உணவு விநியோகம் செய்து வருகின்றார். அவர், தனது நண்பரின் மகள் இந்திரா காந்தி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை சந்திக்க சென்றபோது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சேர்ந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் அங்கு உணவுக்காக அல்லாடி கொண்டு இருந்ததை கண்டார்.
மருத்துவமனை கேண்டினும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகிறது. இதனால் அவர்கள் ஹோட்டல்களை தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தது.
பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தினமும் இலவச உணவு வழங்க குலாப் முன் வந்தார். ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் 250 பேருக்கு மட்டுமே இலவச உணவு வழங்க ஆரம்பித்தார்.
இதனை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.
இதன் காரணமாக பலர் தங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற சுப நிகழ்ச்சிகளின் போது இந்த அறக்கட்டளைக்கு உதவ தொடங்கினர்.
ஹைதராபாத்தில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வினியோகிக்கும் ஒரு நிறுவனம் அதன் நிர்வாகி அசார் மக்குசி என்பவர் தொடர்பு கொண்டு உள்ளார்.
வாரம் ஒரு முறை சாப்பாடு கொடுப்பதற்கு பதிலாக தினமும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றார். இதற்காக உங்களுக்கு எல்லா வகையிலும் உதவுவதாகவும் உறுதி அளித்தார். இவருடன் கைகோர்த்து உள்ளார் .
அன்றிலிருந்து இந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று சையது குலாப் கூறினார்.
டாக்டர்கள் ஆலோசனைப்படி நோயாளிகளுக்கும் அவர் உறவினர் களுக்கும் கீ ரைஸ், புலாவ் அன்ன சாம்பார், உள்ளிட்ட தரமான உணவுகள் வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.