நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானகம்


கொரோனா தொற்றுகளின் பாதிப்பு மிகவே அதிகரித்து வருகிறது நம் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்திகள் குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டியது அதிக முக்கியமாகி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது காலம் எடுக்கும் நடவடிக்கை எனினும் அதற்கு பரிகாரம் தரும் பல்வேறு மார்கங்கள் உள்ளன. ஆயுர்வேத கலப்பு அல்லது பானகங்கள் குடிப்பதும் அவற்றில் ஒன்று உடலை காப்பாற்ற மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க தினசரி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானகம் செய்ய தேவையான பொருட்கள்-
1 கப் தண்ணீர், கால் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, கால் ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் ஆப்பிள் வினிகர், 1 ஸ்பூன் தேன், ஒரு வாணலியில், தண்ணீர், இஞ்சி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும் தண்ணீர் கொதிக்க தொடங்கிய பின் அடுப்பை அனைத்துவிட்டு தண்ணீர் காய விடவும் பின்னர் இந்த நீரை ஒரு கப்பில் ஊற்றி அதில் தேன் மற்றும் வினிகரை சேர்க்கவும் இந்த பானகம் எவ்வகையில் சிறந்தது?
இந்த பானகம் ஆரோக்கியத்துக்கு உகந்த பொருட்கள் நிரம்பியுள்ளதால் உடல் வீக்கம் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான சக்தியை கொண்டது இதில் உள்ள ஆப்பிள் வினிகர் உடலில் உள்ள கெட்டநோய்கள் உருவாக்கும் அணுக்களை அழிக்கவல்லது குடல்களின் ஆரோக்கியத்தை சீர் செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்கும் தன்மை கொண்டது இவை பலமான நோய் எதிர்ப்பு சக்திகளை உடலுக்கு தரும் மஞ்சள் மற்றும் இஞ்சி இரண்டுமே நோய்களை எதிர்க்கும் தன்மையுடையன தவிர உடலின் நச்சுப்பொருட்கள் நாசமாக்கும் வல்லமை பொறுத்தியவை தவிர இஞ்சி உடலில் வெள்ளை ரத்த அணுக்கக்களை அதிகரிக்க உதவும் தவிர வெளிநோய் அணுக்களை உடலில் புகாமல் இருக்கும் வகையுல் பணியாற்றும்.