
மதுரை: டிசம்பர் 23-
பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்து வைக்க முடியாது என்றும், பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி பகவத் கீதை என்றும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். பகவத் கீதை ஒரு மத புத்தகம் இல்லை. தார்மீக அறிவியல். அது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவங்களை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
மதுரையில் கோவை ஆர்ஷ வித்யா அறக்கட்டளை வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விண்ணப்பம் மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கருத்து கூறிய நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இவ்வாறு கூறினார். கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி விமல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளையை எப்சிஆர்ஏ கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.












