மும்பை:அக் 4- இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிவடைந்து 65,084 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 123 புள்ளிகள் சரிந்து 19,405 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை கடும் சரிவுடன் தொடங்கின. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 463.23 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,048.87 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135.80 புள்ளிகள் வீழ்ந்து 19,392.95 ஆக இருந்தது.
புதிய பொருளாதார தரவுகளால் அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த கவலைகளால் உலகளாவிய சந்தைகள், ஆசிய பங்குச்சந்தைகளின் பலவீனமான சூழல்களால் இந்தியப் பங்குச்சந்தைகளைகளையும் பாதித்ததால் இந்திய சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன.