பசவராஜ் பொம்மைமருத்துவமனையில் அனுமதி

பெங்களூர், அக்.17-
கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.
பிஜேபி எம். எல். ஏ., வும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மைக்கு முழங்காலில் கடுமையாக வலி இருந்து வந்தது.
மருத்துவர்கள் ஆலோசனை பேரில் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அறுவைச் சிகிச்சை நடந்தது.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ சில் பசவராஜ் பொம்மை பூர்ண குணம் அடைய வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.