பசவ பாரம்பரியத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுவாமிஜி அறிவுறுத்தல்

தாவணகெரே, டிச. 20: “பசவ பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்பவர்கள், வேத பாரம்பரியத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். இரண்டையும் பின்பற்ற வேண்டும் என்பதனை சரண தத்துவம் விரும்புவதில் என சாணேஹள்ளி பண்டிதாராத்யா சிவாச்சாரியா சுவாமிஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மைசூரில் உள்ள அகில பாரத சரண் சாகித்ய பரிஷத் மற்றும் மாவட்ட‌ சரண சாகித்ய பரிஷத் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாவணகெரே தாலுகா சரண சாகித்ய பரிஷத் புதிய நிர்வாகிகளின் சேவா தீக்ஷா மற்றும் சரண சிந்தனை நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.
‘சில வேதங்களில் உள்ள உண்மை வெளிப்பட்டால் பலரது கண்கள் சிவந்து விடும். பசவண்ணரின் கூற்றின் சாராம்சம் கல் கடவுள் கடவுள் அல்ல. ஆனால், பெரும்பாலான மக்கள் கல், மண் மற்றும் மர கடவுள்களை வணங்குகிறார்கள். சரண தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இஷ்டலிங்கத்தை வழிபடும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.லிங்காயத் என்பது சாதியல்ல. அது ஒரு தத்துவம். சித்தாந்தம். அந்த நியதிப்படி லிங்கத்தை அணிந்து வழிபடுபவர்கள் லிங்காயத்துகள் மட்டுமே. பிறக்கும் போது யாரும் லிங்காத்துகளாக பிறப்பது இல்லை. இது பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் வருகிறது. எனவே அந்த அறிவை வளர்த்துக் கொண்டு, உள்வாங்க வேண்டும் என்றார்.“சிற்பத்தின் அழகை காண நான் கோவிலுக்கு செல்கிறேன். கடவுள் இருக்கிறார் என்று நம்பி அல்ல. கோவில்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புமி பூஜை, குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்பதில்லை. இதற்கு பல விமர்சனங்கள் என் மீது உள்ளன. விமர்சனம் நம‌க்கு முக்கியமில்லை. “அர்ப்பணிப்பு முக்கியம்” என்று அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.