பஞ்சாப் மாநில பொறுப்பாளராக சித்தராமையா நியமனம்

சண்டிகர், ஜூலை 22- அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வருவதற்காக தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார் அதன் பொறுப்பை அவர் ஏற்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது காங்கிரஸ் கட்சியின் தலைவராக நாளை பொறுப்பேற்கும் விழா நடைபெறுகிறது. தலைவராக நவஜோஷ் சிங் உட்பட 4 செயல் தலைவர்களையும் நியமிக்கப்பட்டு பதவி ஏற்க உள்ளனர். முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்கை
அழைக்க சித்தராமையா முயற்சித்துள்ளார். அங்கு நிலவும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. நவஜோஷ் சிங் தலைவராக பதவியேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக ஏற்கனவே 60 எம்.எல்.ஏ.,களை அழைத்துள்ளனர். பல அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பல முக்கிய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அடுத்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களுக்கும் அதிகமாக கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது அமரித்சரசில் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில் நாளை பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் உள்பட பலர் பங்கேற்கின்றனர் என்றார்.