காங்கோ: எரிபொருளை கடத்திச்சென்ற நேரத்தில் படகில் தீ பிடித்து 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. காங்கோ தலைநகர் கென்யாவின் மேற்கு பகுதியிலிருந்து முக்கண்டா நகருக்கு இந்த படகு சென்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முபதாகா நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த படகில் நடந்த தீ விபத்தில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. தவிர மேலும் சிலர் காணாமல் போயிருக்கும் சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து உறுதியான தகவல்கள் இன்னமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே காங்கோ நதியில் படகு ஒன்று கவிழ்ந்து 40 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்த சம்பவம் நடந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் தற்போது இந்த விபத்து நடந்துள்ளது. தவிர சாமான்யமாக வெறும் குறைந்தளவில் பயணிகளை ஏற்றுக்கொள்வதை விடுத்து அதிகளவில் பயணியரை ஏற்றிச்செல்வதே இத்தகைய விபத்துகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்நாட்டின் பெரும்பாலோனோருக்கு போதிய சாலைவசதிகள் இல்லாதநிலையில் இவர்கள் பெரும்பாலும் சரக்குகளை எடுத்துச்செல்வதற்கும் மற்றும் வேறு இடங்களுக்கு போவதற்கு காங்கோ நதியையே மக்கள் நம்பிகொண்டுள்ளனர் . நதி மார்கமாக பயணிப்பது செலவு குறைச்சல் என்ற நிலையில் மக்கள் அதிகளவுக்கு படகுகளையே நம்பி வாழ்கின்றனர்.இந்த நிலையில் நாட்டின் இப்பகுதியில் படகு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். இதே வேளையில் இப்பகுதியின் வடக்கு கிவு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 30 பேர் இறந்துபோயுள்ளனர். தவிர இவர்களுக்கு எதிரான கும்பல் இங்குள்ள வீடுகளை தீயிட்டு கொளுத்தியும் உள்ளனர். எம் 23 என்ற தீவிரவாத கும்பல் இந்த செயல்களில் வெடுப்பட்டுவந்துள்ளது.இந்த கும்பல் காங்கோவின் மிக பெரிய நகரமானகோவாவை கைப்பற்றியிருப்படப்பித்துடன் அன்றிலிருந்து இவர்களின் செயல்கள் உலகத்திற்கு தெரியவந்துள்ளது . மார்ச் 23 2009 அன்று இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட a நிலையில் அன்றிலிருந்து இந்த குழுவிற்கு எம் 23 என்ற புனை பெயர் வழங்கப்பட்டது . .