படகு கவிழ்ந்து இறந்தவர்களில்2 பேரின் உடல்கள் மீட்பு

விஜயபுரா, ஜூலை.4 -கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரில் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 2 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கோல்ஹாரா தாலுகாவில் உள்ள பலுதி ஜக்கவேல் அருகே கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆற்றில் இன்று காலை மீண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏற்கனவே 3 பேரின் உடலகள் நேற்று மீட்கப்பட்டது. மீதமுள்ள 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
குழு உறுப்பினர்களான யான்காஞ்சி, தயப் சவுத்ரி மற்றும் தசரத கவுடர் ஆகியோரின் சடலங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டன. தற்போது மற்ற இருவரான ரஃபீக் பாம்பே மற்றும் மெகபூப் வாலிகர் ஆகியோரின் உடல்களும் மீட்க‌ப்பட்டுள்ளன.
காலை 6 மணி முதல் தேடும் பணியில் ஈடுபட்ட‌ 30 தீயணைப்பு படை வீரர்கள் 5 படகுகள் மூலம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் ஆற்றங்கரையில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​போலீசாரைக் கண்டு பயந்து படகில் தப்ப முயன்றனர். பயணம் செய்த போது பலத்த காற்று வீசியதால் படகு ஆற்றில் கவிழ்ந்தது. படகில் பயணித்த 2 பேர் நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பினர்.