படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் சாவு

கவுகாத்தி, ஜூன் 18-அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில் 3 குழந்தைகளைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 28 மாவட்டங்களில் இதுவாஇ 18.95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 55 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தின் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.