படகு விபத்தில் உயிரிழப்பு

ரோம், ஆக. 5-ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் (வயது 45). இவர் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள், லியானா (14) மற்றும் மேசன் (11) ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றார். இத்தாலியில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சலேர்னோ மாகாணத்தில் உள்ள அமல்பி கடற்கரையில் அவர்கள் ஒரு சிறிய படகில் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களின் கப்பல் 85 பேருடன் சென்ற சுற்றுலா கப்பல் ஒன்றின் மீது மோதியது.
இதில் அட்ரியன் கடலில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், புளூம்பெர்க் அமெரிக்க ஜனாதிபதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்தில் வாகனின் கணவரும் காயமடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர்.