படுகாயம்

மும்பை, ஜனவரி. 21 – சிவசேனாவை சேர்ந்தவர் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த். இவர் நேற்று காலை சத்துகுறைபாடால் பால்கர், மோக்கடா பகுதியில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்திக்க காரில் சென்றார். கார் காஷிமிரா சாக்னாய் நாக்கா அருகே சென்ற போது பின்னால் வந்த கார் முன்னாள் மந்திரியின் கார் மீது மோதியது. இதில் காரின் பின் சீட்டில் இருந்த தீபக் சாவந்த் காயமடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அந்தேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.