படுக்கை விரிப்பில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் உடல்

பெங்களூர்: நவம்பர். 18 – ஜெ பி நகரின் ஆறாவது கட்டம் அருகில் உள்ள ரோஸ் கார்டென் அருகில் உறை மற்றும் படுக்கை விரிப்பில் சுற்றிவைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொழிலதிபர் குறித்த அடையாளத்தை கண்டு பிடித்துள்ள புட்டேனஹள்ளி போலீசார் இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
போக்குவரத்து தொழிலதிபர் சுப்பிரமணியன் (67) இறந்த தொழிலதிபர் ஆவர். கடந்த நவம்பர் 16 அன்று தன் பேர குழந்தையை மாலை பேட்மிண்டன் வகுப்பிற்கு அழைத்து சென்றிருந்தார். பின்னர் பாலசுப்ரமணியன் வீட்டுக்கு திரும்பாமல் காணாமல் போயிருந்தார். மறுநாள் காலை பாலசுப்ரமணியத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த சாவு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பேரனை பேட்மிண்டன் வகுப்புக்கு அழைத்து சென்ற பாலசுப்ரமணியன் அன்று மாலையே 4.55 மணியளவில் தன் மருமகளுக்கு போன் செய்து தனக்கு வெளியில் வேலை இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட போது போன் ஸ்விச் ஆப் ஆகியிருந்துள்ளது. இதனால் கலவரம் அடைந்த அவருடைய மகன் சோமசுந்தர் உடனே சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையத்தில் காணாமல் போன புகார் அளித்துள்ளார். இது குறித்து புட்டெனஹள்ளி போலீசார் அசாதாரண மரணம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவருடைய உடலின் மீதுஎவ்வித காயங்களும் இல்லாத நிலையில் சி டி ஆர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தவிர இறந்தவரின் போன் விவரங்களை ஆய்வு செய்த போது இவர் தொடர்ந்து பெண் ஒருவருடன் பேசி வந்திருப்பது தெரிய வந்துள்ளது .