பட்ஜெட்டுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

புதுடெல்லி:பிப். 1-இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்கிறார். பல சலுகைகள், புதிய திட்டங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் சற்று முன்னர் நடைபெற்றது. இந்நிலையில் 2024ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒன்றிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார்.