பணம் கொடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை வாங்க பிஜேபி முயற்சி – முதல்வர் குற்றச்சாட்டு

பெங்களூரு, மார்ச் 23: மக்களவைத் தேர்தலுக்கான களம் தயாராகி வருகிறது. பிரச்சாரம் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தங்களது வெற்றிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு தலா ரூ.50 கோடி கொடுத்து ராஜினாமா செய்ய பாஜக வலியுறுத்துவதாக‌ முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடினார். வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவார்கள். எதிர்க்கட்சிகள் மட்டும்தான் சட்ட விரோதமாக சொத்து சேர்த்த பணக்காரர்களாக உள்ளனரா.
பாஜகவில் யாருமே இல்லையா?. ஊழலின் தந்தை பாஜக என்று சித்தராமையா சாடினார்.
தற்போதும் ஆபரேஷன் கமலுக்கு முயற்சி செய்து வருகிறார். எங்கள் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய ரூ.50 கோடி கொடுப்பதாக கூறி கவர்ந்திழுக்க பார்க்கிறார்கள். உங்களின் தேர்தல் செலவுக்கும் பணம் தருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் பணத்திற்கு உறுதியளிக்கிறார்கள். அது கருப்புப் பணம் இல்லையா. அது ஊழல் பணம் இல்லையா என்றார்.
மாநில காங்கிரஸின் ரூ.118.8 கோடி வருமான வரித்துறையால் கட்சியின் வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டுள்ளதாக மோடி நிர்வாகத்தை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.”நாங்கள் 78 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துள்ளோம். அவர்கள் தலா 10 ரூபாய் வழங்கியுள்ளனர்.
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் இருந்து சுமார் ரூ.90 கோடி வசூலித்துள்ளோம். எம்எல்ஏ சீட்டுக்கு ஆசைப்பட்டவர்களிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளோம். அதாவது சுமார் ரூ. 21 கோடி ரூபாயாகும். அந்த பணத்தையெல்லாம் பாஜக முடக்கி விட்டது என்றார்.