பணம் பறித்த கும்பல் கைது

டெல்லி ஆகஸ்ட். 9 உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் Blued என்ற தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப்-ல் போலி ஐடி உருவாக்கி, நட்பு அடிப்படையில சாட் செய்வார்கள். பின்னர், தன்பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா? எனக்கேட்பார்கள். அப்படி விருப்பம் இருக்கிறது என சாட் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்தால், அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்வார்கள்.
உடலுறவு முடிந்ததும், அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துவிடுவார்கள். மேலும், உடலுறவில் ஈடுபட்டதை வீடியோவாக படம் எடுத்து வைத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டல் விடுத்து பணம் பறித்துக்கொள்வார்கள்.