பணியில் இருந்த போலீஸ் மயங்கி விழுந்து பலி :அரசு மரியாதையுடன் அடக்கம்

திருப்பத்தூர், அக்.18-
ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சல் ஊராட்சி ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் 45 இவர் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகன் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பாரா பணிக்கு சென்றவர் நேற்று அதிகாலை பணியில் இருந்தவர் திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருடன் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் நேற்று மாலை ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள பாரதிதாசன் நகர் ஏரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஸ்ரீதரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்பி விஜயகுமார் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இறப்பு நிதி உதவியை வழங்கினார்.