பண்டிகைகளை முன்னிட்டு கோழி மாமிசம் விலை கிடுகிடு உயர்வு

ஹோசகோட்டே : ஏப்ரல் 10- முனிதவாவரா , ஊர் திருவிழா , உகாதியின் மறுநாள் ஹோச தொடுக்கு (மாமிச உண்பது தொடக்கம்) பின்னர் ரம்ஜான் ஆகிய பண்டிகைகள் வரிசையாக வந்திருப்பதால் கோழி மாமிசத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த நான்கைந்து தினங்களுக்கு முன்னர் பாய்லர் கோழி கிலோ 170 ரூபாய்க்கு விற்று வந்தது. அதுவே இப்போது தடாலடியாக 240 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதே போல் பெரிய பாய்லர் கோழி 180 லிருது 240 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் பத்து இருபது ரூபாய்கள் மட்டுமே வித்யாசம் உள்ளது. சிறிய பாய்லர் மாமிசத்தின் விலை 70 உயர்ந்திருக்கும் அதே வேளையில் பெரிய பாய்லர் கோழி மாமிசத்தின் 60 ருபாய் விலை உயர்ந்துள்ளது. நாட்டு கோழியின் விலை விண்ணை முட்டும் வகையில் 300 ரூபாயாக இருந்தது 550 முதல் 600 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பந்தய கோழிகளின் விலை கிலோ 700 முதல் விற்பனையாகிறது. உயிர் கோழியின் விலை 700 , 550 முதல் 600 ரூபாக்கு விற்பனையாகிறது பாய்லர் கோழி உண்பதால் பல உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன. என்று மக்கள் இப்போதெல்லாம் நாட்டு கோழிகளின் பக்கம் திரும்பியுள்ளனர்.அதிலும் பண்ணைகளின் கோழிகளை விரும்பாமல் கிராமங்களில் இயற்கை சூழலில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளையே வாங்க துவங்கியுள்ளனர். இவற்றின் விளையும் இயற்கையாகவே உயர்ந்துள்ளது . ஆடு செம்மறிஆடுகளின் விலைகளில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை . தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி 750 முதல் 800 ரூபாக்கு விற்கப்படுகிறது. வெய்யில் காலங்களில் கோழி உற்பத்தி குறைந்துள்ள நிலையில் இவற்றின் மாமிச விலைகள் உயர்ந்துள்ளது. அனேகன் தாலுகாவில் கிலோ 200 முதல் 210 ரூபாய்க்கு கோழி மாமிசம் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கோழி மாமிசம் 270 முதல் 290 ரூய்க்கு உயர்ந்துள்ளது. வெளியிலால் உற்பத்தி குறைவு மற்றும் வரிசையாய் பண்டிகைகள் ஆகியவை கோழி விலைகள் உயர காரணங்களாகும் .