பண்ணை வீட்டில் தனியாக‌ இருந்த பெண் கொலை

பெங்களூரு, ஏப். 6: கக்கலிபுராவில் உள்ள‌ பண்ணை வீட்டின் கதவை உடைத்து தனியாக இருந்த‌ பெண் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நேற்று இரவு கிரிகவுடாதொட்டியில் நடைபெற்றுள்ளது. கிரிகவுடா தொட்டியா பகுதியைச் சேர்ந்த சாந்தி (53) படுகொலை செய்யப்பட்டார். பண்ணை வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் சாந்தியைக் கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன், சாந்தியின் கணவர் மாரடைப்பால் இறந்தார். அவரது 5 வயது மகன் விபத்தில் இறந்தார்.இந்த நிலையில், பண்ணை வீட்டில் சாந்தி தனியாக வசித்து வந்தார். இதை கவனித்த மர்மநபர்கள் அவரை கொலை செய்து விட்டு, அங்கிருந்த தங்கநகை, வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்ததும் கக்கலிபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.