பண்ணை வீட்டில்25 மனித மண்டை ஓடுகள்: போலீசார் விசாரணை

ராமநகர், மார்ச் 11:
பிடதி அருகே ஜோகனஹள்ளி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் 25 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
பலராம் என்ற நபர் மண்டை ஓடுகளை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பலராம் மண்டையோட்டை சேகரித்து மந்திரம் போட பயன்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர் மயானத்தில் வழிபடுவதைக் கண்ட மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பிடதி போலீசார் பலராமைக் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். விசாரணையில் எனது தாத்தா காலத்திலிருந்தே மண்டையோடு பூஜை செய்து வருகிறோம் என்று பலராம் தெரிவித்து உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மகா சிவராத்திரி அமாவாசை நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.