
ஹைதராபாத், அக். 23- ஹைதராபாத்தில் காட்கேசர் என்ற பகுதியில் பசு கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த சோனு என்பவர் மீது துப்பாக்கி சீடு நடத்தப்பட்டுள்ளது.. பசு கடத்தும் கும்பலைச் சேர்ந்த சிலர், சோனுவை குறிவைத்து மிகக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சோனு.. பசு கடத்தலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாகவே பசு கடத்தலுக்கு எதிராகப் போராடி வருகிறார். இதற்கிடையே இவர் மீது நேற்று புதன்கிழமை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் இதில் படுகாயமடைந்த சோனு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோனுவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். தனது மகன் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறிய சோனுவின் தாயார், பசுக்களைப் பாதுகாக்க மேலும் பல மகன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும்,
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சோனுவின் தாயார் மேலும் கூறுகையில், “எனது மகன் உயிருக்குப் போராடுகிறான். ஆனால், பசுக்களைப் பாதுகாக்க மேலும் 10 மகன்களையும் தியாகம் செய்வேன். நேற்று எனது மகன் போன் செய்து.. காட்கேசரில் தன்னை யாரோ சுட்டுவிட்டதாகக் கூறினார். கடந்த 5-6 ஆண்டுகளாக எனது மகன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். குற்றவாளிகளை அரசு கைது செய்ய வேண்டும்” என்றார்.














