Home Front Page News பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

பர்மிங்காம்: ஜூலை 2-
இந்​தியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பர்​மிங்​காமில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு தொடங்​கு​கிறது.
ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட ஆண்​டர்​சன்​-டெண்​டுல்​கர் டிராபிக்​கான தொடரில் ஹெட்​டிங்​லி​யில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. அந்த அணி 371 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்தி சாதனை படைத்​திருந்​தது.
இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி தரப்​பில் 5 சதங்​கள் அடிக்​கப்​பட்ட போதி​லும் வலு​வில்​லாத பந்​து​வீச்​சால் இந்​திய அணி தோல்​வியை சந்​தித்​தது. தொடரில் 0-1 என பின்​தங்​கி​யிருக்​கும் நிலை​யில் 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இன்று பர்​மிங்​காமில் இங்​கிலாந்​துடன் மீண்​டும் மோதுகிறது இந்​திய அணி. பர்​மிங்​காமிலும் வெப்​பம் அதி​க​மாக காணப்​படு​கிறது. ஆடு​களத்​தில் புற்​கள் அதிக அளவில் உள்​ளது. இதனால் ஹெட்​டிங்லி மைதானம் போன்றே பர்​மிங்​கா​மும் பேட்​டிங்​கிற்கே சாதக​மாக இருக்​கும் என கூறப்​படு​கிறது.
இதனால் இங்​கிலாந்து அணி​யின் 20 விக்​கெட்​களை​யும் வீழ்த்​து​வ​தில் இந்​திய அணிக்கு கடும் சவால்​கள் காத்​திருக்​கக்​கூடும். இது ஒரு​புறம் இருக்க பணிச்​சுமையை கருத்​தில் கொண்டு இந்த போட்​டி​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு அளிக்​கப்​படக்​கூடும் என தெரி​கிறது. ஒரு​வேளை அவர், களமிறங்​காத பட்​சத்​தில் இடது கை வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் அறி​முக வீர​ராக இடம் பெறக்​கூடும் அல்​லது ஆகாஷ் தீப் சிங் களமிறங்​கக்​கூடும். முதல் போட்​டி​யில் பிரசித் கிருஷ்ணா பெரிய அளவில் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறி​னார்.
இதனால் அவர், தனது யுக்​தி​களை மாற்றி அமைக்​கக்​கூடும். இந்​திய அணி கூடு​தலாக ஒரு சுழற்​பந்து வீச்​சாள​ருடன் களமிறங்​க​வும் வாய்ப்பு உள்​ளது.
இந்த வகை​யில் குல்​தீப் யாதவ் அல்​லது வாஷிங்​டன் சுந்​தர் களமிறங்​கக்​கூடும். மேலும் ஷர்​துல் தாக்​குர் நீக்​கப்​பட்டு நித்​திஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.
பேட்​டிங்​கில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரிடம் இருந்து மீண்​டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் தனது அறி​முக ஆட்​டத்​தில் கவனம் ஈர்க்​கத் தவறிய சாய் சுதர்​சன், 8 வருடங்​களுக்கு அணிக்கு திரும்பி உள்ள கருண் நாயர் ஆகியோர் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் பின்​வரிசை பேட்​டிங் மோச​மாக இருந்​தது. மேலும் பீல்​டிங்​கில் சுமார் 7 கேட்ச்​களை தவற​விட்​டிருந்​தனர். இந்த இரு விஷ​யங்​களி​லும் இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.
பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து அணி முதல் போட்​டி​யில் பாஸ்​பால் அணுகு​முறையை கையாண்டு வெற்றி கண்​டது. பென் டக்​கெட், ஸாக் கிராவ்​லி, ஆலி போப், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் ஆகியோரை உள்​ளடக்​கிய பேட்​டிங் வரிசை இந்​திய அணி​யின் பந்து வீச்சு துறைக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும். பந்து வீச்​சில் ஜோஷ் டங்க், பென் ஸ்டோக்​ஸ், பிரைடன் கார்​ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். முதல் போட்​டி​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறிய கிறிஸ் வோக்​ஸுக்கு பர்​மிங்​காம் சொந்த மைதானம் என்​ப​தால் அவரிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். இங்​கிலாந்து லெவன்: பென் ஸ்டோக்​ஸ், ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட், ஆலி போப், ஜோ ரூ ட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஷோயிப் பஷிர், கிறிஸ் வோக்​ஸ், பிரைடன் கார்​ஸ், ஜோஷ் டங்க். இந்​திய அணி: ஷுப்​மன் கில் (கேப்​டன்), யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல், சாய் சுதர்​சன், அபிமன்யு ஈஸ்​வரன், கருண் நாயர், துருவ் ஜூரெல், நித்​திஷ் குமார் ரெட்​டி, ஷர்​துல் தாக்​குர், வாஷிங்​டன்​சுந்​தர், ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ், ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்​ஷ்தீப் சிங்​. நேரம்​: பிற்​பகல்​ 3.30 நேரலை: சோனி ஸ்​போர்​ட்​ஸ்​, ஜியோஹாட்​ஸ்டார் பர்மிங்காமில் இந்திய அணி எப்படி?- பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது. கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்து இருந்தது.

Exit mobile version