பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி, நவ. 8- திருச்சானூர் பத்மாவதி தயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஆகம விதிகளின்படி, நேற்று கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்படும் பணியான ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் 9 மணி வரை கற்ப கிரகம், கொடிமரம், பலிபீடம், விமான கோபுரம், முகப்பு கோபுர வாசல் மற்றும் இதர உப சன்னதிகள் என அனைத்தும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டன.