பத்மாவதி தாயார் பவனி

திருப்பதி: நவம்பர் , 16 -திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 10-ம் தேதி கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை சர்வபூபால வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையடுத்து மாலையில் தங்க ரதத்தில் தாயார் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்றிரவு, கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.