பந்தயம் கட்டி மாணவிக்கு முத்தம் கொடுத்து வெறியாட்டம்

மங்களூர்: ஜூலை . 21 – நகரின் பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் வெறியாட்டம் நடத்தியிருப்பதுடன் பந்தயங்கள் கட்டி கொண்டு மாணவி ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. மாணவர் ஒன்று சேர்ந்து உண்மை மற்றும் தைரியம் என்ற விளையாட்டை விளையாடி உள்ளனர். அப்போது விளையாட்டின் நியமனம் படி மாணவி ஒருவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளனர். தங்கள் சக மாணவர்களின் எதிரிலேயே மாணவர்கள் முத்தம் கொடுத்த காட்சிகளை படம் பிடித்து கொண்டு சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இத்தகைய பந்தயங்களால் கல்லூரி மாணவர்கள் வழி மாறி சென்றுள்ள நிலையில் நகர போலீசார் இப்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.