பன்னரகட்டா வனவிலங்கு பூங்காவில் 7 சிறுத்தை குட்டிகள் பலி

பெங்களூர் செப் 20 – பெங்களூர் பன்னார்கட்டா வனவிலங்கு பூங்காவில் உள்ள 7 சிறுத்தை குட்டிகளுக்கு பெலைன் பான்லூ கோபீனியா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது.செப்டம்பர் 5 ல் வைரஸ் நோய் தாக்கியது. இதில் 7 சிறுத்தை குட்டிகள் பலியானது.
அண்மையில் பன்னார்கட்டா வனவிலங்கு பூங்காவில் சிறுத்தைகள் சபாரி அமைக்கப் பட்டுள்ளது.
இதில் மூன்று சிறுத்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தன. இங்கு மொத்தம் 80 சிறுத்தைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுத்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அங்கிருந்து பீலி, ரங்கண்ணா மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்குள்ள வனவிலங்குகள்
மறுவாழ்வு மையத்தில் உள்ள மொத்த பிராணிகளுக்கும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வைரஸ்களை தடுக்கும் மருந்துகள் தரப்படுகிறது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி பணிகள் நடக்கின்றன.
பிலீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்படுகிறது.
அவைகளுக்கு பெலைன் பான்லூ கோபீனியா என்ற பார்வோ வைரஸ் தாக்கி உள்ளது.
இவைகளுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருகிறது. குடல் முழுவதும் பாதித்து வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.
மயக்கம் சோர்வு ஏற்படுவதால் இவைகளுக்கு தினமும் குளுக்கோஸ் வழங்கி வருகின்றனர். வன விலங்குகளை பராமரிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்