பன்னரகட்டா வனவிலங்கு பூங்காவில் 15 மான்கள் பலி

பெங்களூர், செப்.21-
பன்னார்கட்டா வனவிலங்கு பூங்காவில் சிறுத்தை குட்டிகள் இறப்புக்குப் பின் 15 மான்கள் உடல் நலம் பாதித்து உயிரிழந்துள்ளது. இது வனவிலங்கு பூங்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனர்கட்டா வனவிலங்கு பூங்காவில் உள்ள 15 மான்களுக்கு சிறுங்குடல் காஸ்ட்ரிக் பிரச்சனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மான்களுக்கு இதய கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானதை மிருக காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மான்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால்
கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவைகளை நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட 35 புள்ளிமான்களை மாநகராட்சி வனத்துறை பாதுகாப்பில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இங்கு வருகின்ற புள்ளி மான்கள் பெரிதும் உடல் நலம் பாதிக்கப்பட்டி ருந்ததால் மெலிந்து காணப்பட்டது.
அவைகளை மருத்துவ மனைக்கு கொண்டுச் சென்றபோது அவைகளின் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
அவைகள் பாதிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் அவைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டது.
என்று மாநகராட்சி செயல் இயக்குநர் சூர்யா சென்
தெரிவித்திருந்தார்.

கால்நடை மருத்துவ பரிசோதனையின் வல்லுனர் ஒருவர் கூறுகையில் , மான்களுக்கு ஈரல் பகுதியில் பெரும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாகனங்களில் கொண்டு வரும்போது அவைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் காயங்களும் ஏற்பட்டன. மருத்துவ பாதுகாப்பில் இருந்த போது பசும் புற்கள் தீவனம் வழங்கப் பட்டது.

அவைகளுக்கு வழக்கமான உணவுகள் கிடைப்பது கடினமானதாக இருந்தது என்று கால் நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த மான்கள் பெரிதும் உணர்வுள்ளவை.ஆயினும் அவைகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு பலியானது.