பன்னரகட்டா விலங்கியல் பூங்காவில் சிங்கம் ராமா சாவு

பெங்களூரு, நவ. 17: பன்னரகட்டா விலங்கியல் பூங்காவில் சிங்கம் ராமா உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளது
பெங்களூரு ஊர்கம் ஆனேக்கல் தாலுகாவில் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் சிங்கம் ‘ராமா’ (13) வியாழக்கிழமை உயிரிழந்தது. பல உறுப்புகள் செயலிழந்ததால் சிங்கம் இறந்திருக்கலாம்.
உடல் உறுப்புகளின் மாதிரி, கூடுதல் பரிசோதனைக்காக கால்நடை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என, பன்னர்கட்டா உயிரியல் பூங்கா நிர்வாக இயக்குனர் சூர்யாசென் தெரிவித்தார்.

புதன்கிழமை வாந்தி உள்ளிட்ட‌ அறிகுறிகள் காணப்பட்டன. உடனடியாக சிகிச்சை அளித்தும், உடல் சோர்வு அடைந்த‌து. கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சிங்கம் ராமா உயிரிழந்தது என்றார்.
2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி பயோ கார்டனின் கணேசா மற்றும் அனு சிங்கத்திற்கும் ராமா பிறந்தது.