பப் பார் ஓட்டல்களில் புகை பிடிக்க தனி அறை – போலீஸ் கமிஷனர் உத்தரவு

பெங்களூர் மார்ச் 15- நகரின் அனைத்து ஓட்டல்கள் , பார் மற்றும் ரெஸ்ட்டாரெண்ட்டுகள் , கிளப்புகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் புகை பிடிக்கவென தனி அறைகளை அல்லது தனி பகுதிகளை ஒதுக்குமாறு நகர போலீஸ் ஆணையர்பி தயானந்த உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர நகர மாநகராட்சி மற்றும் என் ஓ சியில் தெரிவித்துள்ள சட்ட நியதிகளின்படி இந்த அறைகள் இருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பகுதிகளில் உணவோ புகையிலை அல்லது எவ்வித போதை பொருளும் விநியோகிக்கக்கூடாது. தவிர இவை குறித்து அறிவிப்பு பலகைகள் வைத்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவிர இந்த தனி அறைகளில் எந்த வித பானங்களும் விநியோகிக்கப்பட்டு கூடாது புகைபிடிக்கதவர்கள் இந்த நச்சு புகைகளால் பாதிக்க படுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது விஷயமாக சில கடும் நடவடிக்கைகளை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளார். இந்த நியமங்கள் சரியான முறையைப்பின்பற்றப்படுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். அப்படி நியமங்களை சரியாக பின்பற்றாத உணவு மற்றும் மது பண கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது