பயங்கரவாதிகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலி

ஸ்ரீநகர், ஜன.2- ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன் புகுந்த
இரண்டு நபர்கள் ராஜோரி மாவட்டத்தில் உள்ள டங்க்ரி கிராமத்தில் உள்ள 3 வீடுகளை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.