பயங்கர தீ விபத்து 9 இந்தியர்கள் பலி

மாலத்தீவு , நவம்பர் 10 –
தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இந்தியர்கள் 9 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.
நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழந்தவர்களின் விவரங்களை திரட்டி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.