
பெங்களூரு: மே 21 –
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் உள்துறை அமைச்சராகவும் உள்ள டாக்டர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவன அலுவலகங்களில் இன்று அமலாக்கத் தறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் கர்நாடக அரசியலில் பரப்பரப்பு நிலவுகிறது.
டாக்டர் பரமேஸ்வருக்கு சொந்தமான சித்தார்த்தா கல்வி நிறுவன மருத்துவ கல்லூரி தும்கூரில் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.தும்கூரில் ஹெக்ரே அருகே உள்ள சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி, தும்கூரில் உள்ள எஸ்எஸ்ஐடி கல்லூரி மற்றும் நெலமங்கலாவில் உள்ள டி. பேகூரில் உள்ள ஒரு கல்லூரி ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.
காலை 9 மணிக்கு 3 கார்களில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து எஸ்.எஸ்.ஐ.டி கல்லூரியில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதற்கிடையில், கல்லூரி வளாகத்திற்குள் ஊடக பிரதிநிதிகள் நுழைய வேண்டாம் என்று டி.ஒய்.எஸ்.பி எச்சரித்துள்ளார். மேலும், டி.ஒய்.எஸ்.பி தலைமையில் கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், சித்தார்த்தா கல்வி நிறுவனத்தில் ஐடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மருத்துவ இடங்களை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த நேரத்தில்தான் பரமேஷ்வரின் நெருங்கிய நண்பர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு, சோதனை நடத்துவது நிறுத்தப்பட்டது. 2019 ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் அவர்கள் அவர்கள் அவர்கள் சேகரித்த தகவலின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பதாக தெரிகிறது. சோதனைக்குப் பிறகு, ஐடி அதிகாரிகள் அமலாக்க இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கர்நாடக மாநில உள்துறை அமைச்சருக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஷ்வருக்குச் சொந்தமான இந்த மூன்று கல்லூரிகளுக்கு அருகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனக்கு
சொந்தமான சித்தார்த்தா கல்வி நிறுவனங்களில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனைகள் குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சர் டாக்டர். ஜி.பரமேஷ்வர் பெங்களூரில் இருந்து தும்கூருக்கு விரைந்துள்ளார்.
அவர் தனது மனைவி கன்னிகா பரமேஷ்வருடன் பெங்களூரிலிருந்து தும்கூருக்கு சென்ற சென்றார் பேகூர் மற்றும் ஹெக்டேர் மருத்துவக் கல்லூரிகளுக்கு உள்துறை அமைச்சர் டாக்டர். ஜி. பரமேஷ்வர் அமலாக்கத்துறையை சந்தித்துப் பேசினார். ்