பெங்களூரு, மே 22 –
எங்கள் கல்லூரிக்கு வந்த அமலாக்க அதிகாரிகள் கோரிய கணக்குத் தகவல்களை நாங்கள் வழங்கியுள்ளோம் என்று உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வர் கூறினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டால், கல்வி நிறுவனம் தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டெல்லி அமலாக்க துறை அதிகாரிகள் எங்கள் மூன்று கல்லூரிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு என்ன அறிவுரைகள் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கேட்ட ஆவணங்களை நாங்கள் வழங்குவோம் என்று அவர் கூறினார்.நான் அவர்களுடன் ஒத்துழைப்பேன். நான் எதையும் மறைக்கவில்லை. இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். நான் சட்டத்தை மதிக்கிறேன். அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வழங்குவதாக அவர் கூறினார்.