பராமரிப்பு இல்லாத பஸ் நிறுத்துமிடம்

பெங்களூர், அக். 7-பெங்களூர் கே. ஆர், புரம், மகாதேவபுரா தொகுதிக்கு உட்பட்ட கொடதி கிராமத்தில் புதியதாக பஸ் ஸ்டாண்ட் ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். இங்கு இது சீர் கெட்டுள்ளது. எங்கும் குண்டும் குழியுமாக உள்ளது. மகாதேவபுரா தொகுதியின்முன்னாள் எம் எல் ஏ அரவிந்த் லிம்பாவலி தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து இந்த புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த பட்டது. இங்கு சீரான பராமரிப்பு இல்லாத தால் சுத்தம் இல்லை. இதன்பேரில் பேரூராட்சியும் அக்கறை செலுத்த வில்லை. இது குறித்து கொடாட்டி கிராம மக்கள் பலமுறை புகார் செய்தனர். ஆயினும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய முன் வரவில்லை. இந்த பஸ் நிலையம் உள்ள இடத்திற்கு 50 மீட்டர் தொலைவில் தான் கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையம் மீது அக்கறை செலுத்த வில்லை. அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பயணி ஸ்ரீ நாத் என்பவர் புகார் செய்துள்ளார். கொடதி கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். மழை, வெயில் காற்று, நேரங்களில் ஒதுங்க முடிய வில்லை. இங்கு தூய்மை என்பது ஒரு மாயை. நிர்வாகம் பயணிகள் நலனுக்காக சீராக வசதிகள் செய்து தர வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.