பரிசோதனையை அதிகப்படுத்த உத்தரவு

ராமேசுவரம்:ஜன. 1: கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.