பறிமுதல் செய்யப்பட்ட பணம் மோசடி-இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு சிசிபிக்கு ஒப்படைப்பு

பெங்களூர் : நவம்பர். 26 – மோசடி வழக்கில் பறிமுதல் செய்யட்ட பணத்தை தன் சொந்த செலவுகளுக்கு பயன்டுத்திய இன்ஸ்பெக்டர் ஷங்கர் நாயக் என்பவருக்கு எதிராக கடந்த 2022 அக்டோபர் 12 அன்று பைட்டராயணபுரா போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கை சி சி பிக்கு மாற்றல் செய்து நகர போலீஸ் ஆணையர் பி தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். . பறிமுதல் செய்த பணத்தை துஷ்ப்ரயோகம் செய்துள்ள குற்றச்சாட்டின் பேரில் ஷங்கர் நாயக்குக்கு எதிராக பைட்டராயணபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்தது . கார் ஓட்டுநர் சந்தோஷ் என்பவர் தன்னுடைய முதலாளியிடம் மோசடி செய்து 75 லட்ச ரூபாய்கள் மற்றும் காருடன் தப்பியோடியிருந்தான் . அன்று போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராயிருந்த ஷங்கர் நாயக் இது குறித்து விசாரணை மேற்கொண்டார் . பின்னர் அக்டோபர் 28 அன்று 75 லட்ச ரூபாய்கள் குற்றவாளியிடமிருந்து கைப்பற்றட்டுள்ளது . தவிர குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பைட்டராயணபுரா போலீஸ் சரகத்தில் சாட்டிலைட் பஸ் நிறுத்தம் அருகில் இந்த சம்பவம் நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 500 ருபாய் முக மதிப்பு கொண்ட 75 லட்ச ரூபாய்களை பி எப் கணக்கில் சேர்த்துள்ளதாக ஷங்கர் நாயக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நீதிமன்றத்திலோ அல்லது மாநில கஜானாவுக்கோ இந்த பணத்தை ஒப்படைக்கவில்லை. பின்னர் இந்த வழக்கு அப்போதைய எஸ் பி கோதண்டராம் என்பவருக்கு மாற்றலானது . ஆனால் இவருக்கும் இந்த விவகாரம் குறித்து முழு விவரம் தெரியவரவில்லை. ஏனெனில் விசாரணையை துவங்கும் முன்னரே கெங்கேரி போலீஸ் நிலையத்திலிருந்து அவர் மாற்றலாகிவிட்டார். இதனால் இந்த விவகாரத்தை ஏ சி பி பரத் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது . பின்னர் இவர் மேற்கொண்ட விசாரணையில் ஷங்கர் நாயக் செய்துள்ள மோசடி தெரியவந்துள்ளது. ஷங்கர் நாயக் தான் கைப்பற்றிய 75 லட்ச ரூபாயை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யாமல் தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளார். . தவிர இந்த 75 லட்ச ரூபாய் கருப்பு பணம் என்று தெரிந்துள்ள நிலையில் வருமானவரி துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் உள்புகுந்துள்ளனர் . இந்த பணத்தை வெளியிடுமாறு வருமானவரி துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர் . இந்த நிலையில் 75 லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொள்ள வருமானவரி துறையினர் பைட்டராயணபுரா போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அனல் இவர்கள் வருவதற்கு முன்னரே இன்ஸ்பெக்டர் ஷங்கர் நாயக் 75 லட்ச ரூபாயை கொண்டு வந்து போலீஸ் நிலையத்தின் கருவூலத்தில் வைத்து விட்டு தப்பியோடியுள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தை சோதனை செய்தபோது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பணத்திற்கும் இதற்கும் வித்யாசம் உள்ளது. ஷங்கர் நாயக் கைப்பற்றிய பணம் 500 ரூபாய் முகமதிப்பிருந்த நிலையில் வருமானவரித்துறையினர் கைப்பற்றிய பணம் வெறும் 100 , 200 500, மற்றும் 2000 ருபாய் முக மதிப்ப்ப்ளிலானவை .இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் போலீஸ் நிபயத்தில் பதிவாகியுள்ள காட்சிகளை கவனித்தபோது ஷங்கர் நாயக் கோணி பையில் பணத்தை கொண்டு வந்து வைத்தது தெரியவந்துள்ளது. பின்னர் இது ஷங்கர் நாயக் கைப்பற்றிய உண்மையான பணம் இல்லை என அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். முழு விசாரணைக்கு பின்னரே உண்மையான விஷயங்கள் தெரியவரும் .