பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் பற்றி எரிந்து நாசம்

பெங்களூரு, மார்ச் 5- பெங்களூருவில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. கொடகேஹள்ளி காவல் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டது. நிலையத்திற்கு அருகில் மாநகராட்சி மைதானத்தில்
டிரான்ஸ்பார்மர் அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே தீப்பொறி எரிந்து வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட 20-25 நிமிடங்களுக்குப் பிறகு போலீசார் வந்தனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
2002 முதல் 2017 வரை பல்வேறு வழக்குகளில் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 20 ஆண்டுகளாகியும், அப்புறப்படுத்தாமல், கைப்பற்றப்பட்ட வாகனங்களை மாநகராட்சி வளாகத்தில் நிறுத்தி இருந்தனர். நிறுத்தியிருந்த வாகனங்களை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. போலீசாரின் அலட்சியமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இப்போது இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முயலும் கொடிகேஹள்ளி போலீசார் பெஸ்காம் குற்றம் சாட்டி உள்ளனர்