பற்றி எரிந்த பயிர் – அணைக்க முயன்ற பெண் கருகி சாவு

ஹாசன், மார்ச் 25: ஆலூர் தாலுகா ஹச்சகோடனஹள்ளி கிராமத்தில் பயிரில் பற்றி எரிந்த‌ தீயை அணைக்க சென்ற விவசாயப் பெண் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஹச்சகோடனஹள்ளியை சேர்ந்த ரத்னம்மா (63) என்ற விவசாயி பெண் தீயில் சிக்கி உயிருடன் கருகி பலியானார்.
நேற்றிரவு தனது பண்ணை தீப்பிடித்து எரிவதாகவும், கண் எதிரே பயிர்கள் கருகி வருவதாகவும் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயில் கருகி ரத்தினம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை மீட்க அப்பகுதி மக்கள் முயற்சி செய்தும் பலனில்லை. ரத்தினம்மாவின் சடலம் ஆலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு இதே காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தீயை அணைக்க முயன்ற மற்றொரு நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பிரிட் டேங்கர் லாரியில் தீ:விஜயப்பூர் மாவட்டம் சிந்தகி நகரின் புறநகரில் உள்ள கலபுராகி பைபாஸ் அருகே சாலையோரம் ஸ்பிரிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்பிரிட் டேங்கர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்து தீப்பிடித்தது.இதற்கிடையே டேங்கர் கவிழ்ந்ததால் டிரைவர் மற்றும் கிளீனர் வாகனத்தில் இருந்து குதித்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து சிந்தகி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.