பலாக்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள் :
பழுக்காத பலாக்காய் – ஒன்று
அரை கப் கடலை மாவு
ஒரு ஸ்பூன் கார பொடி
கால் ஸ்பூன் கரம் மசாலா தூள்
கால் ஸ்பூன் சீரக தூள்
ருசிக்கேற்ப உப்பு
தண்ணீர் , மற்றும் எண்ணெய்
செய்யும் முறை: பழுத்திராத பலாக்காயை எடுத்துக்கொண்டு அதன் தோலை நீக்கவும். பின்னர் சிறிதாகவும் மெலிதாகவும் அதை அறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலை மாவு , ஒரு ஸ்பூன் கார பொடி , கால் ஸ்பூன் கரம் மசாலா பொடி ,கால் ஸ்பூன் சீரக பொடி, சிறிதளவு மஞ்சள் பொடி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தடிமனாக கலக்கி கொள்ளவும். பின்னர் இந்த மாவில் அறுத்து வைத்துள்ள பலாக்காயை போட்டு கலக்கவும். ஒரு தடிமனான ஆழமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும். எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் கலந்து வைத்துள்ள பலாக்காயை எண்ணெயில் போட்டு அது தங்க நிறம் வரும் வரையில் வறுக்கவும். பின்னர் அதை வெளியில் எடுத்து ஒரு தட்டிலோ அல்லது பாத்திரத்திலோ போட்டு வைத்து பின்னர் அதை சுடச்சுட உண்ண கொடுத்தால் உண்பவர் மட்டுமின்றி பார்ப்பவர் வாயிலும் நீர் ஊறுவதை தவிர்க்க முடியாது.