பலாத்காரம் குறித்து பிரஜ்வல் வீட்டில் தடயவியல் சோதனைகள் முடிந்தது

பெங்களூர் : மே. 14 – பாராளுமன்ற உறுப்பினர் ப்ரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச விடீயோக்கள் தொடர்பாக எஸ் பி அலுவலகத்தின் அருகிலேயே உள்ள பிரஜ்வலின் வீடு மற்றும் ஹொலேநரசீபுராவில் உள்ள ஹெச் எம் ரேவண்ணாவுக்கு சொந்தமான வீடுகளில் மேற்கொண்ட சோதனைகளை தடவியல் நிபுணர்கள் முடித்துள்ளனர். பிரஜ்வல் வீட்டில் பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து அவருடைய வீட்டில் தடவியல் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ள தடவியல் அதிகாரிகள் பின்னர் ஹொலேநரசீபுரா சென்றனர். முன்னர் அந்த வீட்டில் வேலை செய்துவந்த பெண் ஒருவர் தான் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தடவியல் துறை அதிகாரிகள் இந்த வீட்டில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். பின்னர் இந்த வீட்டுக்கு சீல் வைத்து சாவியை தடவியல் துறையினர் தங்கள் வசம் கொண்டு சென்றுள்ளனர்.மே 4 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தடவியல் நிபுணர்கள் ஏற்கெனவே வீட்டை சோதனை செய்துள்ளனர் . இப்போது மீண்டும் இரண்டாவது முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹொலேநரசீபுராவின் சென்னாம்பிகே வீட்டிலும் தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரை வைத்து அங்கும் தடவியல் போலீசார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.