பலாத்காரம் பின்னர் மது அருந்தி சிரித்துக்கொண்டிருந்த மடாதிபதி

சித்ரதுர்கா : நவம்பர். 10 – சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு தற்போது சிறையில் தண்டனை அனுபவித்துவரும் முருகா மடாதிபதி சிறுமியரை அழைத்துக்கொண்டு கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது அவருக்கெதிரான குற்றப்பத்திரிகையில் தற்போது பகிரங்கமாகியுள்ளது. மடத்தின் நிலப்பகுதியில் இருந்த ரகசிய படுக்கை அறைக்கு சிறுமியரை அழைத்து சென்று அவர்களை கொடுமை படுத்தி கற்பழித்து வந்துள்ள மடாதிபதி பின்னர் மது அருந்திவிட்டு உரத்த குரலில் சிரித்துக்கொண்டே அவர்களை ஆபாசமாக திட்டியும் உள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமியர் போலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்திருப்பது குற்றப்பத்திரிகையில் பதிவாகியுள்ளது. சிவமூர்த்தி முருகா ஷரனரால் கற்பழிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான சிறுமிகள் தங்கள் மீது நடந்த கொடுமைகள் மற்றும் வார்டன் ரஷ்மியின் வற்புறுத்தல்கள் குறித்து விசாரணை அதிகாரிகளிடம் விவரித்துள்ளார். நான் மடத்தில் இருந்த போது ரஷ்மி எங்களை மடாதிபதியின் அறைக்கு அனுப்பிவந்தார் . அறையின் முன் கதவருகில் சி சி டி வி இருப்பதால் பின் கதவு வாயிலாக எங்களை மடாதிபதியிடம் அனுப்பி வந்தனர். என்னுடன் பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் அதே மார்கமாக மடாதிபதியின் படுக்கை அறைக்கு சென்றுள்ளோம் என சிறுமி ஒருவள் தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாள். மடத்தில் இருந்த சிலர் ஸ்வாமிஜி மற்றும் ரஷ்மியின் இந்த செயல்களுக்கு முழு ஆதரவாக இருந்தனர். நாங்கள் அறைக்குள் செல்ல மறுத்தால் எங்களை கண்டபடி திட்டுவார். , மற்றும் அடிப்பார்கள் .மற்றும் தள்ளி விடுவார்கள் என பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவள் தனக்கேற்பட்ட கொடுமைகள் குறித்து விவரித்துள்ளாள். ஹாஸ்டல் வார்டன் ரஷ்மிக்கு முருகாஸ்ரீ மடாதிபதி சிறுமிகளின் பெயர் பட்டியலை கொடுத்து வந்தார். அதன்படி ரஷ்மி எங்களை தனியாக மடாதிபதியின் படுக்கை அறைக்குள் அனுப்பி வந்தார். நாங்கள் போக மறுத்தால் எங்களை அடித்து துன்புறுத்துவார். மடாதிபதியின் அறையில் போதை தரும் சாக்லேட்டுகள் இருந்தன. அவற்றை உண்ட போது நினைவு தவறிப்போகும் என்றும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஞாயிறு கிழமையும் டியூஷன் என்ற போர்வையில் பொது அறையில் அனைத்து மாணவியரையும் வார்டன் ரஷ்மி அழைப்பர். பின்னர் இரண்டு பேரை மட்டும் அங்கேயே குப்பை கூட்ட தங்க வைத்து கொள்வார். அப்போது நானும் அங்கேயே இருந்தேன் . மடாதிபதி என்னை பக்கத்தில் உட்காரவைத்து கொண்டு பழங்கள் மற்றும் உலர் பழங்கள் கொடுப்பார். என்னை மடாதிபதி கற்பழித்தார். நான் அங்கேயே அழுதுகொண்டு உட்கார்ந்து விட்டேன் . என் எதிரிலேயே மடாதிபதி பின்னர் மது அருந்திவிட்டு என்னை அசிங்கமாக திட்டினார் என சிறுமி ஒருவள் மடாதிபதியிடம் தன் அனுபவம் குறித்து விவரித்துள்ளாள். இந்த வகையில் முருகா ஷரணறு எண்ணற்ற சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது குறித்து தற்போது சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இவர் குறித்து புகார் தெரிவிக்க முன் வரவில்லை. மேலும் சில சிறுமிகளை பெற்றோர் இந்த மடத்திலிருந்து திரும்ப வீட்டுக்கு அழைத்துக்கொண்டுள்ளனர் என சிறுமிகளுக்கு ஆதரவாக உள்ள ஒடனாடி நிறுவனத்தின் ஸ்டான்லி என்பவர் தெரிவித்துள்ளார்.