பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


சிக்கமகளூர், ஏப். 17- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிக்கமகளூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிக்கமகளூரு மாவட்டம் மோடியை தாலுகாவின் மதமக்கி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் பெங்களூரு தாபஸ்பெட் ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றி வருகிறார்.
புரதமக்கி கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை அறிமுகம் செய்துகொண்ட சதீஷ், 2020 மே 15ல் சிறுமியை பேச வேண்டும் எனக்கூறி பள்ளி அருகில் வரவழைத்தார். அவருக்கு தின்பண்டம் குளிர்பானம் வாங்கிக் கொடுத்து தானும் உட்கொண்ட பின் பள்ளி வளாகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தார் இதை வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டினார்.
வீட்டுக்கு சென்ற சிறுமி தாயிடம் நடந்ததை கூறினார் மே 16 பாளூர் காவல் நிலையத்தில் அவரின் தாயார் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து சிக்மகளூர் நகரின் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் அவரது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விருதாஷெட்டி நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் படி உத்தரவிட்டார்.