பலாத்கார புகார் கொடுத்த இளம் பெண் விசாரணைக்கு ஆஜர்

பெலகாவி : ஜூலை. 25 – தோட்டக்கலைத்துறையின் காணாபுரா செடிகள் வளர்ப்பு மையத்தின் உதவி இயக்குனர் ராஜ்குமார் டாக்களேவுக்கு எதிராக கற்பழிப்பு உட்பட பத்து புகார்களை பதிவு செய்துள்ள சென்னப்பட்டணாவை சேர்ந்த இளம் பெண் இன்று போலீசாரின் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். நகரின் ஏ பி எம் சி போலீஸ் நிலையத்தில் ஆஜரான இளம்பெண்ணை போலீசார் தாலூகா மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தி பின்னர் இந்த விவகாரம் தொடர்பான அவரின் வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனர். ராஜ்குமார் டாக்களேவுக்கு எதிராக இளம் பெண் அதிரடியாக பத்து பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் கற்பழிப்பு (இ பி கோ 376) , கடத்தல் (இ பி கோ 366 ) , கர்பிணியாக்கியது (இ பி கோ 312) , மோசடி (இ பி கோ 420 ) , பெண் மீது தாக்குதல் (இ பி கோ 354) , ஆபாசமாக திட்டியது (இ பி கோ 504 ) , உயிர் மிரட்டல் (இ பி கோ 506 ) , கௌரவத்திற்கு களங்கம் உண்டாக்குவது ( இ பி கோ 509 ) மற்றும் தனிமைக்கு பாதிப்புகள் உண்டாக்குவது (ஐ டி சட்டம் 66 இ ) , பாலியல் தனி விடீயோக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டது (67 ஏ ) , ஆகிய குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார். இளம்பெண்ணின் தனிமையான விடியோக்கள் கடந்த பதினைந்து நாட்களாக சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளன. இந்த இளம் பெண்னின் குற்றச்சாட்டுக்கு உட்பட்டுள்ள ராஜ்குமார் டாக்களே 2018ல் அமைச்சராக இருந்த ஸ்ரீமந்த்த பாட்டில் என்பவருக்கு அந்தரங்க செயலாளராக இருந்துள்ளார். அந்த நேரத்தில் இளம் பெண்ணுடன் தொடர்பு வளர்ந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட ராஜ்குமார் இப்போது எனக்கு எதிராகவே பொய் குற்றச்சாட்டு ,மிரட்டல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுவதாக கடந்த ஜூலை 18 அன்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கும் போலீசாருக்கு நான் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன் என இளம் பெண் தெரிவித்துள்ளார்.