பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

காபூல்: அக்.9- ப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த மாகாண தலைநகர் ஹெராத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர்அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்றுபதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 12 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.நா. சபை, செஞ்சிலுவை சங்கம்உள்ளிட்டவை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த அமைப்புகள் சார்பில் 5 தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஐ.நா. சபை, செஞ்சிலுவைசங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் நிலைமைஇன்னும் மோசமாகி இருக்கும்.ஹெராத் பகுதியில் மீண்டும் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதால், எச்சரிக்கையாக இருக்க மக்களை அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.