பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு ஐசிஸ் தீவிரவாதி கைது

லக்னோ (உத்தரபிரதேசம் ) ஜனவரி. 18 – பாகிஸ்தானின் ஐசிஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகள் கொண்டு நாட்டில் பல இடங்களில் நாச வேலைகள் நடத்த திட்டமிட்டிருந்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அலிகடா முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவனை கைது செய்துள்ளனர். இந்த கைதுடன் ஐசிஸ் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த அலிகடா பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அலிக்கடா முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் சமூக பனி துறை பட்ட மாணவர் பைஜான் (24) என்பவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. இவன் அலிகடாவில் ஐசிஸ்தீவிரவாத இயக்கத்தை நிறுவுவது மற்றும் அதற்க்கு உறுப்பினர்களை சேர்ப்பது ஆகிய விஷயங்களில் ஈடுபட்டுவந்துள்ளான். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட குற்வாளிகளிகளிடம் நடத்திய விசாரணையில் இவன் குறித்து கிடைத்த தகவலின்பேரில் இவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான் . இவன் குறித்து தகவல் அளிப்போருக்கு 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்திருந்தனர். அலிகடா முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் கூட்டங்களில் நாட்டின் பல இடங்களில் தாக்குதகள் மற்றும் வேறு பல நாச வேலைகள் குறித்து திட்டமிட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. ஐசிஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த அலிகடா முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் இந்த பல்கலைக்கழகத்தில் நடவடிக்கை மேற்கொண்டு ஆறு மாணவர்களை கைது செய்தனர்.