பெங்களூரு ஆக 11 பெங்களூர் பல்கலைக்கழகம் எஸ்சி. எஸ்.டி., வகுப்பின் பி.எச்.டி. , பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ஆப்பிள் மேக் புக் மடிக்கணினிகள் என்ற லேப் டாப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. அதனை தற்போது 171 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பின் பி. எச்.டி., மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டம் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது.எனவே இவ்வாண்டு அத்தகைய மாணவர்களுக்கு லேப் டாப் வழங்க அரசு முன்வந்துள்ளது . இதில் 171 மாணவர்களுக்கு, ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படுகிறது.
இது ஒவ்வொன்றும் 99 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலானவை. இவைகளை எஸ்சி., டி. எஸ்.பி துணை நிதியில் வழங்கப்படுகிறது.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் எம். சி .,சுதாகர் கூறுகையில்,
கர்நாடக மாநிலத்தில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களுக்காக 223 கோடி ரூபாய் நிதி வழங்க முதல்வர் சித்ராமய்யாவை அணுகி கோரப்பட்டுள்ளது. எங்கள் அரசு கர்நாடகத்தில் ஐந்து உத்தரவாதங்களை அமுல்படுத்தி உள்ளதால், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து துறைகளின் நிதியை குறைக்க ஐந்து உத்தரவாத திட்டங்களுக்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.இளங்கலை மாணவர்களுக்கு டேப்லெட் மடிக்கணினி வழங்காதது குறித்து அவர் தெரிவிக்கையில், இந்த திட்ட விபரங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .அந்த அறிக்கை கிடைத்தவுடன் பரிசீலனை செய்யப்படும்.
அரசு பணியாளர்கள்2.5 லட்சம் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. இதனையும் படிப்படியாக நிரப்ப அரசு உறுதிப்பூண்டுள்ளது.
உயர்கல்வி துறையில் 15 ஆயிரம் பேர் குத்தகை அடிப்படையில் அவுட் சோர்ஸ் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஐந்து ஆண்டுகளில் காலியுள்ள பணி இடங்களையும் நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.