பல் பிரச்சனைகளுக்கு வீட்டு மருந்து

உப்பு நீரால் வாயை கொப்பளிப்பது வெறும் தொண்டைகளின் உபாதைகளை தவிற்பதுமட்டுமின்றி அது பற்களின் மீதும் நல்ல விளைவுகளை தரும். உப்பு இயற்கையிலேயே தொற்று பரவுவதை தடுக்கும் ஆற்றல் உடையது . நம் பற்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் சிக்கி கொண்டால் அல்லது வலி இருந்தால் அல்லது ஈறுகளில் வீக்கம் இருந்தால் ஒரு லோட்டா நீரில் அரை ஸ்பூன் உப்பை போட்டு கலந்து வாயை கொப்பளித்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் ஏதாவது பல் சிகிச்சைகளுக்கு உட்பட்டிருந்தால் மருத்துவர்கள் உங்களை ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்க ஆலோசனைகள் வழங்கலாம். அந்த நிலையில் ஒரு சிறிய பருத்தி துணியில் ஐஸ் துண்டுகளை வைத்து ஈறுகள் மற்றும் பற்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு வேளை உங்கள் ஈறுகள் மிகவும் பலவீனமடைந்து வலியுண்டானால் புதினா எண்ணையை பயன்படுத்தலாம். அல்லது பெப்பெர்மென்ட் எண்ணையின் சில துளிகளை நீரில் கலந்து அந்த நீரில் வாயை கொப்பளிக்கவும். பல் வலி போக்குவதில் வெள்ளைப்பூண்டும் மிக நல்ல உபயோகமான மருந்தாகும். வெள்ளை பூண்டை பேஸ்ட் போல் தயாரித்து அதை வலி உள்ள பற்கள் மற்றும் ஈறுகள் மீது தடவவும் . தவிர வெள்ளை பூண்டை பச்சையாகவே வாயில் போட்டு மெல்லவும் செய்யலாம். பல் வலி நிவாரணத்திற்கு லவங்க எண்ணையும் மிக் முக்கிய பங்கு வகிக்கிறது. லவங்க எண்ணையின் சில துளிகளை பஞ்சியில் போட்டு அதை வலி இருக்கும் பற்களின் இடையில் வைத்ததால் பல் வலி முற்றும் இல்லாது போகும் என்பது உறுதி.